அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஓட்டப்பந்தயம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பந்தயத்தில் பங்கேற்பது மனிதர்கள் அல்ல விந்தணுக்கள். 'ஸ்பெர்ம் ரேசிங்' என்ற நிறுவனத்தால் விந்தணு பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி ஹாலிவுட் பல்லேடியத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஆண்களிடையே கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதால், விந்தணு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சி என கூறுகின்றனர்.