சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வட்டாரத்தில் லட்சிய இலக்கு வட்டார திட்டத்தில் தேர்வான விவசாயிகள் கூட்டம் நடந்தது. திருப்பத்தூர் ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆத்திரம்பட்டி, கண்டவராயன்பட்டி, மணல்மேல்பட்டி, வஞ்சினிபட்டி, கொன்னத்தான்பட்டி, திருக்களாப்பட்டி, ஆலம்பட்டி, நெடுமறம் ஊராட்சிகளின் விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் உதவி இயக்குனர் செந்தில்நாதன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் நல்லகுமார் முன்னிலை வகித்தார். துணை இயக்குநர் (மா. தி) பன்னீர்செல்வம் தலைமை வகித்து விவசாயிகளுக்கு திட்டங்களை விளக்கினார். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ரேகா, வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் விமலேந்திரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பாஞ்சாலி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மைய இயக்குனர் திம்மிராஜ், சிவகங்கை மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ஆர்த்தி, உதவி அலுவலர்கள் நாகராஜன், ரத்தினகாந்தி, காஜாமுகைதீன் பங்கேற்றனர்