பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

4245பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நெசவாளர் காலனி சேர்ந்த மாணவி ஒருவர் காரைக்குடியில் உள்ள TNPC தேர்வுக்காக பயிற்சி மையத்தில்படித்து வருகிறார். இவர் நெசவாளர் காலனி இருந்து தமிழ்நாடு அரசு நகரப் பேருந்து வழித்தட எண் 3 ல் கூட்டம் அதிகம் இருந்ததால் மாணவியால் பேருந்துக்குள் செல்ல முடியவில்லை. அதனால் படிகட்டில் மாணவி பயணம் செய்துள்ளார். இதை பார்த்த அரசு நகரப் பேருந்து ஓட்டுநர் விக்னேஷ் பேருந்துகுள் வா இல்லையென்றால் கீழே இறங்கு பாதி வழியில் பேருந்தை நிறுத்தி மாணவியை கீழே இறங்க கூறியுள்ளார்.

கீழே இறங்காமல் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து புதிய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தார். வரும் வழியில் மாணவி தனது தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார்.

தொடர்ந்து மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் புதிய பேருந்து நிலையத்தில் நகர பேருந்தை சிறை பிடித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு அங்கு வந்த காரைக்குடி வடக்கு காவல் துறையினரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். புகார் மீது காவல் துறை விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி