ஹரியானா: குருகிராமில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் ICU பிரிவில் விமானப் பணிப்பெண் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது, மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அச்சமயத்தில் 2 பெண் செவிலியர்களும் அருகில் இருந்துள்ளனர். மயக்க நிலையில் இருந்ததால் அந்த பெண்ணால் எதுவும் செய்ய முடியவில்லை. இதையடுத்து, அப்பெண் டிஸ்சார்ஜ் ஆனவுடன் தனது கணவரின் துணையுடன் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.