சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்காததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.