நான் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன் என நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் திமுக சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரவி மோகன், "இங்கு நிறைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள், ஆனால் நான் எப்போதும் போல நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.