சிவகங்கையில் மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி

50பார்த்தது
சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய அரசு தமிழக அரசிற்கு தரவேண்டிய நிதியை மாநில அரசு ஏற்பதாக தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இனியாவது மத்திய அரசு வெட்கப்பட்டு நிதியை தருவார்கள் என நம்புகிறேன். முதல்வர் பட்ஜெட்டில் குறித்து x தள பதிவில் ரூ என்று குறியீடு பதிவிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, அரசு மற்றும் தனியார் ஆவணங்களில் Rs என்று தான் பயன்படுத்துகிறோம். இந்தியில் உள்ள ₹ என்ற குறியீடை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்தலாம். ரூபாய் குறியீடு பிரச்சனை பெரிய விஷயம் அல்ல. அதற்கு பின்னர் வரும் எண்கள் தான் முக்கியம் என ப. சிதம்பரம் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி