சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிங்கம்புணரி நெற்குப்பை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது இம்மழையின் காரணத்தினால் நெற்குப்பை பேரூராட்சியில் மாலை 6 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி ஏடிஎம் மிஷினில் வாடிக்கையாளர்கள் கடவுச்சொல்லை பயன்படுத்த (பாஸ்வேர்டு) மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மறுபுறம் நாள்தோறும் மதுரை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சி, பொன்னமராவதி முதலிய பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி பயணிக்கும் பயணிகளுக்கு முறையான பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தினால் தற்சமயம்பெய்து வரும் மழையில் நனைந்தவாறு இடி மின்னல் வெட்டிற்க்கு இடையே பெரும் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருந்து வருகின்றனர். கடந்த 75 ஆண்டுகளாக பேரூராட்சி அந்தஸ்தில் இருந்து வரும் நெற்குப்பை நகர் பகுதியில் 7 பேருந்து நிறுத்தங்கள் இருந்து வரும் நிலையில் ஒரு பேருந்து நிலையமோ? அல்லது ஒரு முறையான பயணிகள் நிழற்குடையோ? இல்லாத நிலையில் தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.