நட்சத்திர பேச்சாளர் நடிகை எமி பேச்சு

68பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே
சருகணி பகுதியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான எமி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு என்ன துணிச்சல் இருந்ததோ அதே துணிச்சல் கொண்டவராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். அவர் செயல்படுத்திய குடிமராமத்து திட்டம் இன்றளவும் தமிழக விவசாயிகளிடம் பாராட்டைப்பெற்று வருகிறது. அவர் செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை யாரும் புறக்கணித்து கடந்து சென்று விடமுடியாது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி