கொடைக்கானலில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இ-பாஸ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளது. இந்நிலையில் 'கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில் மறு உத்தரவு வரும்வரை நீட்டிப்பு ‘கொடைக்கானலுக்கு வாகனங்களில் வருவோர் epass.tnega.org இணையதளம் மூலம் இ-பாஸ் பெறலாம்' என திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி கூறியுள்ளார்.