சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்ப்புறத்தில் வலியுறுத்தியும் டாஸ்மார்க் மேலாளரை கண்டித்தும் சி ஐ டி யு மாவட்டத் தலைவர் திருமாறன் தலைமையில் ஆட்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்
சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனைக்கு தகுந்தாற்போல் மாதந்தோறும் தனது சொந்த கார் டிரைவர் உதயக்குமார் என்பவரை பயன்படுத்தி மாதாந்திர மாமூல் லட்சக்கணக்கில் வசூல் செய்யும் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு
மெனவும்
விதிமுறைகளுக்கு மாறாக பணியிடமாறுதலுக்கு ரூ. 40, 000 வரை டிரைவர் உதயக்குமார் மூலம் பெற்று முறைகேடான பணியிட மாறுதல் உத்தரவுகளில் லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடப்பதாகவும்
மதுக்கூட உரிமம் பெற்றவர்களிடம் முறையான பார் உரிமைத் தொகையை வசூல் செய்யாமல், அரசுக்கு வர வேண்டிய பணத்தை ஏமாற்றம் செய்து லட்சக்கணக்கில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்துகின்ற மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.