சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

76பார்த்தது
தமிழக முதல்வர் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டத்தலைவர் அ. பாண்டி தலைமை வகித்தார். இந்த இந்த உண்ண விரத போரட்டத்தில் சத்துணவு மையங்களில் பாதிக்கும் மேல் காலிப் பணியிடங் கள் உள்ளதால் மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
முதலமைச்சர் அளித்த தேர்தல் கால வாக்குறுதியின்படி, சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பணியிலிருந்து ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்கிட வேண்டும். கருணை அடிப்படையில் தகுதி உள்ள ஆண் வாரிசுதாரர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 9000- வழங்கிட வேண்டும்.
அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் தகுதி உள்ள ஊழியர்களுக்கு விகிதாசார அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி