ஸ்டாலின் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர். தேர்தல் நேரத்தில் வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூபாய் 7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் 60 ஆயிரத்திற்கும் மேல் காலியாக உள்ள சத்துணவு ஊழியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் ஓய்வூதியமாக ரூபாய் ஐந்து லட்சம் வழங்க வேண்டும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத ஸ்டாலின் அரசை கண்டித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி