சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 2 -ஆவது முறையாக கார்த்திக்சிதம்பரம் வெற்றி பெற்றதை முன்னிட்டு சிவகங்கை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு இன்று மதியம் சுமார் ஒரு மணியவில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நகர் காங்கிரஸ் தலைவர் தலைமையில் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரியங்கா சிதம்பரம், வெள்ளைச்சாமி, நகர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மோகன்ராஜ், சண்முகராஜன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் இமயமெடொனா, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் உடையார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராஹிம், சிவாஜி பேரவை நிர்வாகி தமிழரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.