சிவகங்கையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாஜகவினர்

67பார்த்தது
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்டவை, பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் அவரின் பதவி ஏற்பை கொண்டாடும் வகையில் சிவகங்கை பேருந்து நிலைய பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
இந்நிகழ்ச்சியில்நகரத் தலைவர் உதயா பொதுச் செயலாளர் பாலா சதீஷ் உட்பட ஏராளமான பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் இன்று இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you