நான்கு வழிச்சாலை பகுதியில் விளையாட்டு மைதானம் திறப்பு

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
நான்கு வழிச்சாலையை ஒட்டி விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது. தற்போதுள்ள இளைய தலைமுறையினர் படிப்பு மட்டுமல்லாது விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதுமான பயிற்சிகள், வழிகாட்டிகள், பயிற்சியாளர்கள், விளையாட்டு உபகரணங்கள், ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் கிடைப்பது இல்லை. பெரும்பாலும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில்தான் விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் உள்ளிட்டவைகள் கிடைத்து வருகின்றன. பின் தங்கிய மாவட்டமான திருப்புவனத்தில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் எதுவும் கிடையாது. அனைத்திற்கும் 15 கி. மீ தள்ளி உள்ள மதுரைக்கு தான் செல்ல வேண்டும், மதுரை சென்று பயிற்சி முடித்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி பள்ளி செல்ல முடியாது. இந்நிலையில் திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலையை ஒட்டி தனியார் ஒருவர் இரண்டு ஏக்கர் பரப்பளவில் செயற்கை புல் தரையுடன் கூடிய விளையாட்டு பயிற்சி மைதானம் தொடங்கியுள்ளார். குறைந்த கட்டணத்தில் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. விளையாட்டு மைதானம் திறப்பு விழா இன்று நடந்தது. மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் என்பவர் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி