சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று டாக்டர் அனில்குமார் கண் மருத்துவமனை சிறப்பு லேசர் சிகிச்சை மையத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமுக்கு வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். முகாமின்போது சிறப்பு கண் பரிசோதனை, கண் அழுத்தம், லேசர் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மூத்த நிபுணர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பல்வேறு வயதுடைய பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் கண் நோய்கள் பற்றிய விழிப்புணர்வும்இன்று மாலை சுமார் ஐந்து மணி வரை வழங்கப்பட்டது.