திரையுலக சூப்பர் ஸ்டாராக போற்றப்படும் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தினம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் ரஜினி ரசிகர் மன்ற சார்பில் ரஜினிகாந்தின் 76 ஆவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் சுமார் 200 ஏழைப் பெண்களுக்கு சேலைகளை, ஒன்றிய பொறுப்பாளர் அலாவுதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.