குடிநீர் கொண்டு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

70பார்த்தது
சிவகங்கை நேருபஜார் பகுதியைச் சேர்ந்த சேது மகன் செல்லப்பாண்டி(43) என்பவர் வாகனம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், மானாமதுரை பகுதியில் இருந்து குடிநீருடன் சிவகங்கைக்கு வந்த வாகனம் சுந்தரநடப்பு அருகே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த வாகன ஓட்டுனர் செல்லப்பாண்டியை அருகிலிருந்தோர் சிவகங்கை அரசு தலைமை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா காவல்துறையினர் இன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி