ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

55பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள வலக்கானி கிராமம் அமைந்துள்ளது, இந்த கிராமத்தின் உள்ள வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, நீதிமன்றமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்ப்பளித்தது அதன் அடிப்படையில் இன்று வட்டாட்சியர் முருகன் போலீசார் பாதுகாப்புடன் ஜே. ஜி. பி கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டு வந்தனர், அப்போது வீதியில் இருந்த ராஜப்பா என்பவரின் வீட்டை இடிக்க முயற்சித்த போது வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கையில் பெட்ரோல் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டும் வீட்டின் மேற் கூரை மீது ஏறி நின்று கொண்டு போராட்டம் நடத்தினார்கள் , மேலும் இடிக்கப்படக்கூடிய வீட்டுக்குள் சென்று உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்கள்,
அது மட்டுமல்லாமல் மண்ணெண்ணெய் பெட்ரோலையும் மேலே ஊற்றிக் கொண்டார்கள், போலீஸ்காரர்கள் அவர்களிடமிருந்து அதை பறித்து தடுத்து நிறுத்தினார்கள், இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தவர்களை காவல்துறையினர் கைது செய்து இளையான்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இன்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி