தமிழ்நாடு அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா

85பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு இப்பள்ளியில் பயிலும் 1310 மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கினார். பின்பு அவர் பேசுகையில் மிகவும் பின் தேன் தங்கிய மாவட்டமான சிவகங்கை கல்வியில் ஒரு இமாலய சாதனையை படைத்துள்ளது. தமிழ்நாடு அளவில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்ற ஆண்டு 6ம் இடத்திலும், இந்த ஆண்டு 2வது இடத்தையும் பிடித்துள்ளோம். அதேபோன்று சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2-ம் இடத்தையும், இந்த ஆண்டும் அதே இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமானது.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்துள்ளது சாதனை தான். அதேபோன்று தமிழக முதல்வரும் தொடர் வெற்றியை நமது மாநிலத்தை பொருத்தவரை பெற்று வருகிறார்.
பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமானது. கடினமான காரியத்தை லாவகரமாக சாதித்த பள்ளிக்கல்வித்துறைக்கு எனது வாழ்த்துக்கள் என்றார். தொடர்ந்து இப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார் அதன் பின்பு புதிதாக ஆதார் பதிவு நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.