ஆர் எஸ் பாரதிசிங்கம்புணரியில் பரபரப்பு பேச்சுபரபரப்பு பேச்சு

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முதல்வர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய ஆர் எஸ் பாரதி,
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது அதற்குள் நாம் ஆற்றி இருக்கின்ற பணிகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2021 க்கு பிறகு திமுக அரசின் திட்டத்தால் பெண்கள் தற்போது திமுகவின் வாக்காளர்களாக மாறிவிட்டனர். எதிரிகள் தனித்து வந்தாலும் ஒன்று சேர்ந்து வந்தாலும் நமக்கு கவலை இல்லை. ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அமித்ஷா எதையும் செய்வார். கழகத் தோழர்கள் முக்கியமான விஷயங்களை செல்போனில் பேச வேண்டாம். செல்போனில் பேசுவதை டேப் செய்து திமுகவை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள். வரும் ஓராண்டில் எதையும் செய்யவும் சண்டாளர்கள் பாஜகவினர் எதையும் துணிந்து செய்வார்கள். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக நம்மை எதிர்த்து பேசிய பல தலைவர்கள் எல்லாம் திமுகவிற்கு தான் வந்தார்கள். காமராஜர் தொடர்ந்து உயிரோடு இருந்தார் திமுகவின் உறுப்பினராகி இருப்பார். என்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி