சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேதேவகோட்டை ரஸ்தா பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்குரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சோமநாதபுரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சோதனை மேற்கொண்டார்.
அந்த சோதனையில் தேவகோட்டை ரஸ்தா பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (33) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து வெளி மாநில ஆன்லைன் லாட்டரி ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.