சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ராம் நகரில் கேஎஸ். காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் மூன்று கடைகள் மற்றும் இந்த கடைகளுக்கு எதிரே உள்ள மளிகை கடை உட்பட நான்கு கடைகளில் வழக்கமாக கடை உரிமையாளர்கள் கடைகளை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உள்ளே இருந்த ரொக்க ம் பணம் திருடு போனது உள்ளது.
இச்சம்பவம் அறிந்த நகர் காவல் ஆய்வாளர் கணேஷ் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார். அப்போது கடையில் உட்புறம் 35 லிருந்து 45 வயது மதிப்பு தக்க மறும நபர் ஹெல்மெட் அணிந்து திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், திருட்டு நடந்த முக்கிய வீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.