கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் பூச்சொரிதல் விழா

73பார்த்தது
கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் பூச்சொரிதல் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூா் அருகே அமைந்துள்ள கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை முதலே பக்தா்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்தனா். மாலையில் மேளதாளத்துடன் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்து, கோயிலில் பூ தூவி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி