சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் என் எஸ் கே தெருவை சேர்ந்த லிங்கம் என்பவர் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும் விசாலினி என்ற மனம் வளர்ச்சி குன்றிய 9 வயது குழந்தையும் உள்ளது. மன வளர்ச்சிகுன்றிய தன் பெண் குழந்தை வயதுக்கு வந்தால் வளர்ப்பதில் சிரமம் ஏற்படும் என்று கருதிய கணவன் மனைவி இருவரும் மனம் உடைந்து இன்று குடும்பத்துடன் மூவரும் விஷமருந்தினர் இதனை அறிந்த அவர்களது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரித்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல்துறையினர்மூவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 9 வயது பெண் குழந்தை விஷாலினி பலியானார் லிங்கம் மற்றும் அவரது மனைவி பானுமதி ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது இந்த குடும்பத்துடன் தற்கொலை முயற்சியை காரைக்குடி வடக்கு காவல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடியில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.