நீட் தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்

60பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம் கமலை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதி உடையப்பன். காளியம்மாள். இவர்களது மகன் ரவி ஐந்தாவது படிக்கும்போது தாயார் காளியம்மாள் புற்றுநோயால் உயிரிழந்தார். ஐந்தாம் வகுப்பு வரை கமலையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் படித்துபின்னர் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பீர்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த நிலையில் பள்ளியில் நடந்த தேர்வுகளில் நன்றாக கவனம் செலுத்தி படித்து அதிக மதிப்பெண் எடுத்ததால் மாணவன் ரவியின் ஏழ்மையை அறிந்து பள்ளி ஆசிரியர்கள் படிக்க பல்வேறு உதவி செய்தனர். மாணவனின் மருத்துவ படிப்பு கனவிற்கு ஆசிரியர்கள் சிறப்பு நீட் தேர்வு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து ஆசிரியர்களின் நீட் தேர்வு பயிற்சியால் இந்தாண்டு நீட் தேர்வு எழுதி 597 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார் மாணவர் ரவி இவருக்கு அரசு பள்ளிக்கான 7. 5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்த இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் 7. 5 சதவீத ஒதுக்கீட்டால் கிராமப்புறத்தில் பயின்ற ஏழை மாணவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி