மது அருந்தியபோது நண்பரை கொலை செய்த 4 பேர் கைது

79பார்த்தது
மது அருந்தியபோது நண்பரை கொலை செய்த 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்புகாவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தேவகோட்டை தாலுகா பூங்குடியேந்தல் அருகே கடந்த 21. 3. 2024 -ல் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தேவகோட்டை ஜீவா நகர் சேதுராஜ் மகன் ராதாகிருஷ்ணன்(38) என்பவரை வெட்டிக் கொலை செய்து தேரளப்பூர் முத்துநாட்டு கண்மாயில் புதைத்துவிட்டு சென்றனர்.
தகவலறிந்த காவல் துறையினர் 14. 5. 2024 -ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) ராதாகிருஷ்ணன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து, தோண்டி எடுக்கப்பட்ட உடலை அரசு மருத்துவர் செந்தில்குமாரை வைத்து உடற்கூராய்வு செய்தனர். இதையடுத்து கொலையில் தொடர்புடைய செல்வகுமார்(34), ராஜா(31), கரண்(25), கார்த்திக்பாண்டி(23) ஆகிய 4 பேரை தேவகோட்டை தாலுகா போலீஸார் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டோங்கரே பிரவீன் உமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி