வருடத்திற்கு ஒருமுறை திறக்கப்படும் சிவன் கோவில்

2514பார்த்தது
வருடத்திற்கு ஒருமுறை திறக்கப்படும் சிவன் கோவில்
மத்திய பிரதேச தலைநகர் போபால் அருகே உள்ள சோமேஸ்வரா கோவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும். இந்த சிவன் கோவில் 10ம் நூற்றாண்டில் ஆயிரம் அடி உயர மலையில் கட்டப்பட்டது. 1974-ம் ஆண்டு கோவிலை பொது மக்களுக்கு திறக்க வேண்டும் என்ற இயக்கம் நடந்தது. இதனால், அப்போதைய முதல்வர் பிரகாஷ் சேத்தி, கோவிலின் பூட்டை அகற்றி, சிவராத்திரி நாளில் மட்டும் வழிபாடு நடத்த அனுமதித்தார். அன்றிலிருந்து சிவராத்திரி அன்று மட்டுமே கோவில் திறக்கப்படுகிறது.