திமுக கூட்டணி 2026-ல் சுக்குநூறாக உடையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சிலர் அரசியலுக்கு வருவோம், வெற்றி பெறுவோம் என உல்லாச கனவில் உள்ளனர் என தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், "இதுபோன்ற கனவை தகர்த்தெறியும் இயக்கம் தான் அதிமுக என்பதை யாரும் மறக்க வேண்டாம். எல்லா கட்டணமும் உயர்ந்துள்ளது, சட்டம் ஒழுங்கு மாநிலத்தில் சரியில்லை” என்றார்.