ராகுலை புகழ்ந்த செல்லூர் ராஜூ - அப்செட்டில் அதிமுகவினர்

56பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில், “நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர்” என ராகுல் காந்தியின் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வைரலான நிலையில் அதிமுகவில் இருந்துகொண்டு ராகுல் காந்தியை புகழ்வதா? என தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், அதிமுக தலைமையும் இதற்கு விளக்கம் கேட்டது. தொடர்ந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக செல்லூர் ராஜூ அந்த பதிவை தற்போது நீக்கியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி