உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகரில் கடந்த பிப்.12ஆம் தேதி நடைபெற்ற விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், ஷிப்ட் கார் ஒன்று வளைவில் திரும்புகிறது. அப்போது சாலையில் வந்த இருசக்கர வாகனம் ஓட்டி நேராக அந்த காரின் மீது மோதி காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இருவர் மீதும் தவறு உள்ளது என கூறி வருகின்றனர்.