சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று (பிப்.,28) மாலை 6 மணிக்கு ஆஜராக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “விசாரணைக்கு வருவதாக சொன்னேன். 8 மணிக்கு வருமாறு காவல் துறை தான் கூறியுள்ளது” என்றார். ஆகையால், இரவு 7 அல்லது 8 மணியளவில் சீமான், போலீசிடம் ஆஜராக உள்ளார். இந்நிலையில், அந்த காவல் நிலையம் அருகே நாதகவினர் அதிகளவில் கூட இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.