மிச்சிகின் பல்கலைக்கழக விஞ்ஞானி ஆடம் சைமன் தலைமையிலான குழு பூமியின் மையக் கருவில் தங்கம் புதைந்துள்ளதை கண்டறிந்துள்ளது. உலகின் மிக விலை உயர்ந்த உலோகங்களில் ஒன்றான தங்கமானது பூமியின் மேற்பரப்பிற்கும், மையத்திற்கும் இடையில் புதைந்து கிடப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் பூமியின் மேற்பரப்பில் இருந்து பல மைல்களுக்குக் கீழே புதைந்திருப்பதால் தங்கத்தை பிரித்தெடுப்பது கடினமான காரியமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.