சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், சீமான் இன்று (பிப்.,28) ஆஜராக இருக்கிறார். இதற்காக, வடபழனியில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் அவர் புறப்பட்டார். ஆனால், வளசரவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த சீமான் கார் வடபழனனி ஏவிஎம் ஸ்டூடியோ அருகே நிறுத்தப்பட்டது. தனது மனைவி வருகைக்காக அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இரவு 8 மணிக்கு அவர் ஆஜராக இருந்த நிலையில் தற்போது 8 மணிக்கு மேல் ஆன நிலையில், அவரது கார் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.