மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழியை உருவாக்கி, சிறந்த வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்க 'புதுமைப் பெண் திட்டம்' வழிவகுத்ததாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர். 2022-23 வரை உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை 13,684 ஆக அதிகரித்துள்ளது. 2023-ல் இத்திட்டத்தின் மூலம் 2,30,820 மாணவிகள் பயனடைந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சுமார் 99.2 சதவிகதம் பேர் எஸ்.சி., எஸ்.டி, பி.சி, எம்.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்கள்.