சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் வீட்டின் பணியாளர் இருவரின் ஜாமின் மனுக்களும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ரத்தான நிலையில், ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். கைதான அமல்ராஜ், சுபாகர் இருவர் மீதும் ஆயுத தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது குறித்து கேட்க சென்றபோது நடந்த தக்ரீரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.