ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில், பாபு மற்றும் கவின் ஆகியோர் உயிரிழந்தனர். நண்பர்கள் உயிரிழந்ததால் பூபாலன் (20) என்ற இளைஞர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, பூபாலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, இச்சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.