சுட்டெரிக்கும் வெயில் - பதநீர், நுங்கு விற்பனை அமோகம்

59பார்த்தது
சுட்டெரிக்கும் வெயில் - பதநீர், நுங்கு விற்பனை அமோகம்
தமிழ்நாடு முழுவதும் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில், வேலூர், திருச்சி, ராமநாதபுரம், விழுப்புரம், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் பொதுமக்கள் தங்களது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பதநீர், நுங்கு வாங்கி செல்கின்றனர். இதனால் பதநீர், நுங்கு விற்பனை அமோகமாக உள்ளது.‌ அருப்புக்கோட்டையில் இன்று பதநீர், நுங்கு கடைகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பதநீர் ஒரு சொம்பு ரூ.80-க்கும், 6 நுங்கு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி