பிரதமர் மோடிக்கு எதிராக இபிஎஸ் கருத்து

63பார்த்தது
பிரதமர் மோடிக்கு எதிராக இபிஎஸ் கருத்து
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறியதாக மோடி ராஜஸ்தான் பரப்புரையில் சர்ச்சை கருத்துக்களை பேசியிருந்தார். இது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் இபிஎஸ், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பிரதமர் இதுபோன்ற சர்ச்சை கருத்தை வெளிப்படுத்துவது இறையாண்மைக்கு உகந்தது அல்ல. நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை பேசுவதை கட்சித் தலைவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி