தண்டவாளத்தில் சிக்கிய ஸ்கூட்டி: உயிர் பிழைத்த பெண்கள் (Video)

61பார்த்தது
பல ஊர்களில் ரயில் தண்டவாளத்தை பலர் ஆபத்தான முறையில் கடக்கின்றனர். அதுபோலத்தான் தற்போது இணையத்தில் பரவி வரும் வீடியோவில், பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் ஸ்கூட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது தண்டவாளத்தின் நடுவில் ஸ்கூட்டி சிக்கிக் கொண்டது. அந்த நேரத்தில் ரயில் வேகமாக வந்தது. அந்தப் பெண் ஸ்கூட்டியை தண்டவாளத்திலேயே விட்டுவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓடினார். ரயில் மோதியதில் ஸ்கூட்டி நொறுங்கியது. இது எங்கு எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்தி