பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

70பார்த்தது
பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு
ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.

இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி