முன்னாள் காதலியை 20 முறை கத்தியால் குத்திய ஹாலிவுட் நடிகர்!

76பார்த்தது
முன்னாள் காதலியை 20 முறை கத்தியால் குத்திய ஹாலிவுட் நடிகர்!
ஹாலிவுட் நடிகர் நிக் பாஸ்கல் தனது முன்னாள் காதலியான ஆல்லீ ஷெஹார்னை 20 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியோடி உள்ளார். நிக் பாஸ்கலும், மேக் அப் ஆர்டிஸ்டான ஆல்லீ ஷெஹார்னும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில், நிக் ஷெஹார்னை கலிஃபோன்ர்னியாவில் இருக்கும் அவரது வீட்டிற்குள் புகுந்து இருபது முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, மெக்ஸிகோவிற்கு தப்பிச் செல்ல முயன்ற நிக் பாஸ்கலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆல்லீ தற்போது குணமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி