யானைகள் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை

81பார்த்தது
யானைகள் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை
யானைகள் அடிக்கடி தாக்கி வருவதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலராம்பூர் மாவட்டத்தின் வத்ராப்நகரில் உள்ள ககனேசாவில் 10 நாட்களாக மூன்று யானைகள் கொண்ட குழு சேதத்தை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பிப்ரவரி 23ஆம் தேதி இரவு, அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு மிக அருகில் இருந்த வீட்டையும் யானைகள் இடித்தது. யானைகள் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அருகில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு, இரண்டு நாட்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி