"என் உயிர் பிரிகிறபோதும் கூட காட்பாடி என்று சொல்லிக்கொண்டுதான் போகும்" என அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார். வேலூர் காட்பாடி அருகே பொன்ணையாற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை நேற்று (ஆக., 30) திறந்து வைத்த பின் பேசிய அவர், என் மக்கள் 50 ஆண்டுகள் இந்த தொகுதியில் என்னை எம்எல்ஏவாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் யாரும் ஒரே தொகுதியில் 50 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தது இல்லை என்றார்.