சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நாதகவினர் விலகி வரும் நிலையில், சேலம் மாநகர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், அடுத்தக்கட்ட அரசியல் பயணம் குறித்து தோழர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.