தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேவுள்ள கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின். இவரிடம் விசாரணை நடத்தச் சென்ற காவலர் மாரிராஜா என்பவரை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு, லெலின் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில், கை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட காவலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர்ந்து, குற்றவாளி லெனினை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.