உக்கடம் புதிய மேம்பாலத்தை பார்வையிட்ட எஸ்.பி. வேலுமணி

70பார்த்தது
கோவை உக்கடத்தில் நேற்று (ஆகஸ்ட் 09) திறக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோவை மாவட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார். அந்த வகையில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு திறந்து வைக்கிறது. இன்னும் இந்த பாலத்தில் வேலை முழுமையாக முடியவில்லை என்பதால் அரசு விரைந்து முடிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: UpdateNews360Tamil
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி