ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சதீஷ்குமார் நேற்று (செப்1) பொறுப்பேற்றார். இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ்-ன் (IRSME) 1986 பேட்ச் அதிகாரியான சதீஷ்குமார், தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும் இந்திய ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய ரயில்வேயில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல்வேறு மண்டலங்கள் மற்றும் பிரிவுகளில் பணியாற்றியவர்.