காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான சசி தரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான சேவாசெவாலியர் விருதை அந்த நாடு அளித்துள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட சசி தரூர் தேர்ந்த ஆங்கில அறிவு கொண்டவராகவும் நாடாளுமன்றத்தில் தர்க்க ரீதியான கேள்விகளை முன் வைப்பவராகவும் அறியப்படுபவர் ஆவார். மிகச்சிறந்த ஆளுமைகளுக்கு பிரான்ஸ் நாடு செவாலியர் விருது வருடந்தோறும் அளித்து வருகிறது. நடிகர் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் ஆகியோர் செவாலியர் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.